ADDED : ஜூன் 27, 2026 10:22 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை பேரூராட்சியில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.
மங்கலம்பேட்டை பேரூராட்சி, 15 வார்டுகளில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.
சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம், செயல் அலுவலர் சண்முகசுந்தரி துவக்கி வைத்தனர். கால்நடை உதவி மருத்துவர் ஹரிமகேஷ் தலைமையிலான உதவியாளர்கள், தெருக்களில் சுற்றித்திரிந்த, 46 நாய்களை பாதுகாப்பாக பிடித்து, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர். இளநிலை உதவியாளர் ராஜசேகர் உட்பட துாய்மை பணியாளர்கள் உடனிருந்தனர்.
