/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வலம்புரி நவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்
/
வலம்புரி நவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஆக 24, 2024 06:42 AM

கடலுார்: கடலுார் வில்வராயநத்தம் வலம்புரி நவசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம் நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 21ம் தேதி மாலை 6:00 மணிக்கு பூஜைகள் துவங்கியது. அன்று மாலை முதல் கால யாகசாலை பூஜை, துவாரபாலகர்கள் கரிகோலம் வருதல், கண் திறத்தல், இரவு 8:00 மணிக்கு விநாயகர் பிரதிஷ்டை மற்றும் பரிவார பிம்ப பிரதிஷ்டை நடந்தது.
22ம் தேதி இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை, விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது.
கும்பாபிேஷக தினமான நேற்று காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, 8:00 மணிக்கு கடம் புறப்பாடு, 8:15 மணிக்கு விமான கலசத்திற்கும், 8:30 மணிக்கு மூலஸ்தானத்திற்கு கும்பாபிேஷகம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

