/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வள்ளலார் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
வள்ளலார் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 08, 2024 11:35 PM

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த கொள்ளுக்காரன்குட்டை வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ௨ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
கல்வி அறக்கட்டளை தலைவர் திருமால்வளவன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் கண்ணன், செயலாளர் சக்கரவர்த்தி, பொருளாளர் ராஜா, வள்ளலார் கல்வியல் கல்லூரி தாளாளர் ராஜேந்திரன் வகித்தனர்.
பள்ளியில் அளவில் 582 மதிப்பெண்கள் பெற்று மாணவிகள் சந்தியா, சுஜிதா, மாணவர் ஜனா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். மாணவி பிரியங்கா, மாணவர் சஞ்சய்குமார் இருவரும் 580 பெற்று 2 ம் இடம், மாணவிகள் செல்வபிரியா, கீர்த்தனா, மாணவர் வசந்தகுமார் ஆகியோர் 578 பெற்று 3ம் இடத்தை பிடித்தனர்.
மாணவர் கோபிநாத் 574 மதிப்பெண் பெற்றார். மரி சந்தியா 572 மதிப்பெண்களும், மாணவிகள் யோகலட்சுமி, தமிழரசன், ஷர்மிளாதேவி ஆகியோர் 571ம், மாணவி சாந்தலட்சுமி 570ம் மதிப்பெண் பெற்றனர்.
பள்ளியில் தேர்வு எழுதிய 363 மாணவர்களில் அனைவரும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத சாதனை படைத்தது.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நண்பர்கள் கல்வி அறக்கட்டளை இயக்குனர்கள் நடராஜன், ஜனார்த்தனன், சுப்ரமணியன், மணிவாசகம், சாரங்கபாணி, திருவேங்கடம், சரவணன், செல்வராஜ், செந்தில்குமார், சரோஜாஅம்மாள், காண்டீபராஜன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.