/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளி சாதனை
/
வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளி சாதனை
ADDED : மே 15, 2024 11:27 PM

கடலுார்: வாழப்பட்டு ஸ்ரீவள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்பு பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பத்தாம் வகுப்பில் ஷண்முக பிரியா, ரிஷிகா ஆகியோர் 500க்கு 473 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்தனர். ஆங்கில பாடத்தில் அகிலன் 97, கணிதத்தில் மித்ரா 99, சோபியா 97 மதிப்பெண் பெற்றனர்.
தமிழில் ரிஷிகா, ஷண்முகபிரியா ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். சமூக அறிவியலில் ஷண்முகபிரியா 92 மதிப்பெண் பெற்றார்.
பிளஸ் 2 வகுப்பில் 500க்கு 477 மதிப்பெண் பெற்று ஷிவானி பள்ளியில் முதலிடம் பிடித்தார். பிளஸ் 2 ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் ஷிவானி 95 மதிப்பெண் பெற்றார்.
கணினி அறிவியலில் பிரதீபா 100க்கு 100 மதிப்பெண் பெற்றார். வேதியியலில் ஷிவானி, அரவிந்த் ராஜன், பிரதீபா 99 பெற்றனர்.
இயற்பியலில் அரவிந்த்ராஜன் 95 மதிப்பெண் பெற்றார். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 வகுப்பில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றனர்.
தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி முதல்வர் சீனுவாசன், தாளாளர் இந்துமதி சீனுவாசன் ஆகியோர் பரிசு வழங்கினர். உதவி தலைமை ஆசிரியை மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு உடனிருந்தனர்.