தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரேஷன் அரசி கடத்திய வேன் பறிமுதல் :டிரைவருக்கு வலை 

ரேஷன் அரசி கடத்திய வேன் பறிமுதல் :டிரைவருக்கு வலை 

ரேஷன் அரசி கடத்திய வேன் பறிமுதல் :டிரைவருக்கு வலை 


ADDED : ஜூலை 26, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ரேஷன் அரசி கடத்திச் சென்ற பிக்கப் வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். 

மங்கலம்பேட்டை அடுத்த விசலுார், கர்னத்தம் பகுதியில் உள்ள வீடுகளில் ரேஷன் அரசியை வாங்கி கடத்தி செல்வதாக மங்கலம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், ஏட்டு சண்முகவேல் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, (டி.என்.05 – சி.எஸ்., 2084) என்ற பதிவெண் கொண்ட பிக்கப் வேனில் ரேஷன் அரசி கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் வருவதை பார்த்த வேன் டிரைவர் தப்பியோடினார்.

அதைத்தொடர்ந்து 500 கிலோ ரேஷன் அரசியுடன் பிக்கப் வேனை பறிமுதல் செய்த போலிசார், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us