/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வதிஷ்டபுரம் புத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
/
வதிஷ்டபுரம் புத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED : ஜூன் 12, 2024 01:48 AM

திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரம் புத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
திட்டக்குடி வதிஷ்டபுரம் புத்துமாரியம்மன் கோவில் திருவிழா ஜூன் 2ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒன்பதாம்நாள் திருவிழாவில் காலை பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிகரகம் சுமந்துவந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்.
காலை 10மணிக்கு புத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சித்திரை தேரில், அம்மன் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பக்தர்கள் வடம்பிடித்து தேர்இழுத்தனர்.
ஊரின் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் தேரில் வலம் வந்து, கோவிலை வந்தடைந்தார். வதிஷ்டபுரம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.