ADDED : ஜூலை 23, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் வி.சி.,கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் ராஜிவ் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் கலைமோகன் துவக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர் துணை மேயர் தாமரைச்செல்வன், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ராமச்சந்திரன், ஹிட்லர், கிருஷ்ணா, சக்திவேல், சலீம், வளவன் நித்யா, சுசி உட்பட பலர் கலந்து கொண்டனர். ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
