/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீரநாராயண பெருமாள் கோவில் திருப்பணி: அமைச்சர் ஆய்வு
/
வீரநாராயண பெருமாள் கோவில் திருப்பணி: அமைச்சர் ஆய்வு
வீரநாராயண பெருமாள் கோவில் திருப்பணி: அமைச்சர் ஆய்வு
வீரநாராயண பெருமாள் கோவில் திருப்பணி: அமைச்சர் ஆய்வு
ADDED : ஜூன் 11, 2024 06:35 AM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் கோவில் கும்பாபிேஷக திருப்பணிகளை, அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்து துரிதப்படுத்தினார்.
காட்டுமன்னார்கோவிலில் பழமை வாய்ந்த வீரநராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வைணவ ஆச்சாரியர்களான நாதமுனிகள், ஆளவந்தார் ஆகியோரின் அவதார ஸ்தலமாகும். ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தை உலகுக்கு வெளிக்கொணர்ந்த தலமாக விளங்குகிறது.
இக்கோவில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், கோவில் திருப்பணிகளை பார்வையிட்டு, அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, கோவில் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம், மின் கோபுரங்கள் அமைப்பது, கோவில் பிரகார நந்தவனங்களை சீர் செய்வது, நடைபாதை கற்கள் பதிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை, சரியான முறையில் மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்.
பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் தங்கவேல், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயசித்ரா, செயல் அலுவலர் செல்வமணி, தக்கார் வேல்விழி, மற்றும் கோவில் புனரமைப்பு குழு, இன்ஜினியர் கார்த்திகேயன், சொர்ணம் அறிவழகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.