/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் தொகுதியில் வாகன சோதனை; இரு இடங்களில் ரூ.15 லட்சம் பறிமுதல்
/
கடலுார் தொகுதியில் வாகன சோதனை; இரு இடங்களில் ரூ.15 லட்சம் பறிமுதல்
கடலுார் தொகுதியில் வாகன சோதனை; இரு இடங்களில் ரூ.15 லட்சம் பறிமுதல்
கடலுார் தொகுதியில் வாகன சோதனை; இரு இடங்களில் ரூ.15 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 23, 2024 05:59 AM

கடலுார்: கடலுாரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்சென்ற 7 லட்சம் ரூபாயை பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சின்னவாணியர் வீதியில் குடிமை பொருள் தனி தாசில்தார் ஜெயக்குமார் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பைக்கை மறித்து விசாரித்தபோது, கடலுார் கூத்தப்பாக்கத்தை சேர்ந்த மனேஷ், 34; என்பதும், உரிய ஆவணங்களின்றி 7 லட்சம் ரூபாய் எடுத்துச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள், மனேஷிடம் இருந்து 7 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பின், அந்த தொகையை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அபிநயாவிடம் ஒப்படைத்தனர்.
அதே போல் கடலுார் வட்டார வளர்ச்சி அதிகாரி பார்த்தீபன் தலைமையிலான பறக்கும் படையினர் ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்கடை பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், புதுச்சேரி, நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த ஞானவேல், 52; என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி 9 லட்சம் ரூபாய் கொண்டு வந்தது தெரிந்தது.
உடன், பறக்கும் படையினர், பணத்தை பறிமுதல் செய்து, கடலுார் தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அபிநயாவிடம் ஒப்படைத்தனர். தாசில்தார் பலராமன் உடனிருந்தார்.

