ADDED : மே 10, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம், துறவடி தெருவை சேர்ந்தவர் குழந்தைவேலு மகன் கார்த்தி, 40. டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பைக் மற்றும் இரண்டு கார்கள், டெம்போ ட்ராவலர் வேன் ஆகியவற்றை தனது வீட்டின் முன் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார்.
நள்ளிரவு 12:30 மணியளவில், வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, வாகனங்கள் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி வந்த கார்த்தி, அப்பகுதி மக்கள் உதவியுடன், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார்.
இதில், அனைத்து வாகனங்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. கார்த்திக் புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.