/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளப்பாக்கம் அய்யனார் கோவிலில் நாளை யாகசாலை பந்தக்கால் நடும் விழா

ADDED : ஜூன் 24, 2024 05:36 AM
நெல்லிக்குப்பம் : வெள்ளப்பாக்கம் பூரணி, புஷ்கலா சமேத அய்யனாரப்பன் கோவிலில், நாளை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடக்கிறது.
நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளப்பாக்கம் பூரணி, புஷ்கலா சமேத அய்யனாரப்பன் கோவிலில், வரும் ஜூலை 1ம் தேதி மகா கும்பாபிேஷக விழா நடக்கிறது.
விழாவையொட்டி, நாளை 25ம் தேதி காலை 7:30 மணிக்குமேல் 9:00 மணிக்குள் யாகசாலைக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடக்கிறது.
வரும் 30ம் தேதி காலை 9:00 மணிக்குமேல் கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், தன பூஜை, கோ பூஜை, முதல்கால பூஜை ஆரம்பம், மூலமந்திர ேஹாமம், இந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. வரும் 1ம் தேதி காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை ஆரம்பம், அய்யனாருக்கு ரக் ஷா பந்தனம், கடம் புறப்பாடு மற்றும் காலை 9:00 மணிக்குமேல் 10:30 மணிக்குள் மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டாளர்கள் செய்திருந்தனர்.