/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளாறு மதகு ஷட்டர் சீரமைப்பு பொதுப்பணித்துறை தீவிரம்
/
வெள்ளாறு மதகு ஷட்டர் சீரமைப்பு பொதுப்பணித்துறை தீவிரம்
வெள்ளாறு மதகு ஷட்டர் சீரமைப்பு பொதுப்பணித்துறை தீவிரம்
வெள்ளாறு மதகு ஷட்டர் சீரமைப்பு பொதுப்பணித்துறை தீவிரம்
ADDED : ஜூலை 30, 2024 05:34 AM

சேத்தியாத்தோப்பு: பாசனத்திற்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், சேத்தியாத்தோப்பு அருகே வெள்ளாற்று மதகு ஷட்டர் சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் கொள்ளிடம் கீழணைக்கு வந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வர உள்ளது. ஏற்கனவே ஏரி முழுகொள்ளளவு எட்டியுள்ள நிலையில் ஏரிக்கும் வரும் உபரி நீர் பூதங்குடி வீனஸ் மதகில் திறந்து வெள்ளாறு வந்தடையும்.
வெள்ளாறு அணைக்கட்டில் தண்ணீரை தேக்கி ஏ.டி.எஸ்., மதகு ஷட்டர் வழியாக பாசன வாய்க்கால்கள் மற்றும் வாலாஜா ஏரிஅனுப்படும். அதையொட்டி, முன்னேற்பாடு பணியை, பொதுப்பணித்துறை பாசன பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றிலிருந்து நேரடியாக பாசனத்திற்கு திறக்கும் ஏ.டி.எஸ்., மதகினை பாசனப்பிரிவு உதவி பொறியாளர் படைகாத்தான் தலைமையில் பணியாளர்கள் செந்தில்குமார், கமலக்கண்ணன், லட்சுமணன் ஆகியோர் ஷட்டர்களை பழுது நீக்கி வர்ணம் பூசி தயார் படுத்தினர்.