/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.இ.டி., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
வி.இ.டி., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 12, 2024 05:31 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் வி.இ.டி., மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர்.
விருத்தாசலம் எருமனுார் சாலையில் உள்ள வி.இ.டி., மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய 131 மாணவர்களும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். மாணவர் கதிர்வாணன் 486, மாணவி சுடர் 481, மாாணவர் ஜெகன் 476 மதிப்பெண் எடுத்து சிறப்பிடம் பெற்றனர். மேலும், கணித பாடத்தில் 6 மாணவர்களும், அறிவியலில் ஒருவரும் சென்டம் எடுத்தனர்.
அவர்களை கல்விக்குழுமத் தலைவர் பத்மாவதி சக்திவேல், செயலாளர் விஜயலட்சுமி சுரேஷ்குமார், பொருளாளர் மோகனா கொளஞ்சிநாதன், தலைமை ஆசிரியர் எடில்பெர்ட் பெலிக்ஸ் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்தினர். உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர் உடனிருந்தனர்.