/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றம் வேப்பூர் ஊராட்சித் தலைவர் பெருமிதம்
/
அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றம் வேப்பூர் ஊராட்சித் தலைவர் பெருமிதம்
அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றம் வேப்பூர் ஊராட்சித் தலைவர் பெருமிதம்
அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றம் வேப்பூர் ஊராட்சித் தலைவர் பெருமிதம்
ADDED : ஜூன் 08, 2024 05:51 AM

வேப்பூர்,: 'வேப்பூரில் பல்வேறு திட்டங்கள் மூலம் அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது' என ஊராட்சித் தலைவர் மகேஸ்வரி திருஞானம் தெரிவித்தார்.
அவரது பேட்டி: வேப்பூர் ஊராட்சித் தலைவராக பொறுப்பேற்றவுடன், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, புதிதாக 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் கழிவுநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டது.
ஊராட்சி முழுவதும் குடிநீர் வினியோகம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்து, வேப்பூர் ஊராட்சி முதல் கூட்டுரோடு வரை பைப்லைன் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. சிமென்ட் சாலை, 3 பாலங்கள், 2 மதகுகள் கட்டப்பட்டது.
விவசாயிகள் நலன் கருதி ஏரிக்கரையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காலங்களில் அரசின் உத்தரவுகளை பின்பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு செய்து, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டது.
வேப்பூர் ஊராட்சியின் பிரதான வருவாயாக உள்ள வாரச்சந்தையை விரிவாக்கம் செய்து சுற்றுச்சுவர், பிளேவர் பிளாக் கற்கள் பதிப்பு, புதிய கடைகள், கோபுர விளக்கு அமைக்கப்பட்டது.
சென்னை - திருச்சி, கடலுார் - சேலம் சாலைகள் இணையும் வேப்பூரில் பாழடைந்த நிலையில் இருந்த பஸ் நிலையத்தை, அரசிடம் முறையிட்டு நவீன வசதியுடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், பூங்கா, உடற்பயிற்சி மையம் கட்டப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு, ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.