/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேப்பூர் வாரச்சந்தை குத்தகை ரூ. 66.07 லட்சத்துக்கு ஏலம்
/
வேப்பூர் வாரச்சந்தை குத்தகை ரூ. 66.07 லட்சத்துக்கு ஏலம்
வேப்பூர் வாரச்சந்தை குத்தகை ரூ. 66.07 லட்சத்துக்கு ஏலம்
வேப்பூர் வாரச்சந்தை குத்தகை ரூ. 66.07 லட்சத்துக்கு ஏலம்
ADDED : ஜூலை 06, 2024 05:03 AM

வேப்பூர்: வேப்பூர் பிரபல வாரச்சந்தை ரூ. 66.07 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டது.
வேப்பூரில் வாரச்சந்தை வெள்ளிக்கிழமை தோறும் நடக்கிறது. இங்கு, சென்னை, விழுப்புரம், துாத்துக்குடி, மதுரை, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருவர்.
ஆடுகள், காய்கறிகள், மீன்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால், சுற்றுப்புற கிராம மக்கள் அதிகளவில் வருவர். மேலும், பண்டிகை காலங்களில் வட மாநிலங்களுக்கு அதிகளவில் ஆடுகள் ஏற்றுமதி செய்யப்படும்.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் சந்தை குத்தகை காலம் முடிந்து, வேப்பூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஏலம் நடத்தப்பட்டும். நடப்பாண்டில் குத்தகை காலம் முடிய இருந்த நிலையில், லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் குத்தகை ஏலம் தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்து வேப்பூர் வாரச்சந்தை ஏலம் நடந்தது. ஊராட்சி தலைவர் மகேஸ்வரி திருஞானம் தலைமை தாங்கினார். துணை பி.டி.ஓ., சங்கர், ஊராட்சி துணைத் தலைவர் மஞ்சுளா செல்வராஜ் முன்னிலை வகித்தனர். ஏலம் ஆரம்ப தொகை ரூ. 59.16 லட்சத்தில் துவங்கியது. கொளப்பாக்கம் ராதாகிருஷ்ணன், அரியநாச்சி சேகர், திருப்பயர் சேகர் குத்தகை ஏலத்தில் ஈடுபட்டனர்.
இதில், அதிகபட்சமாக கொளப்பாக்கம் ராதாகிருஷ்ணன் ரூ. 66.07 லட்சம் ஏலம் கேட்டதால் ஊராட்சி நிர்வாகம், அவரிடம் ஒப்பந்த ஆணையை வழங்கியது.