ADDED : செப் 10, 2024 06:59 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் நடந்த விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலத்தை புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, திண்டிவனத்தில் பல இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட்டது.
இந்த சிலைகளின் விஜர்சன ஊர்வலம் நேற்று மதியம், செஞ்சி சாலையில் உள்ள அங்காளம்மன் கோவில் அருகில் இருந்து துவங்கியது. இந்து முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊர்வலத்தை, புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில், ஆர்.எஸ்.எஸ்., மாநில பொறுப்பாளர் செந்தில்குமார், விநாயகர் சதுர்த்தி விஜர்சன குழு ஒருங்கிணைப்பாளர் பிரபு மற்றும் பா.ஜ.,வினர் பலர் பங்கேற்றனர். டி.எஸ்.பி., சுரேஷ்பாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள், மரக்காணம் அடுத்த கைப்பாணிக்குப்பம் கடலில் கரைக்கப்பட்டது.

