/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குண்டும் குழியுமான விலங்கல்பட்டு சாலை
/
குண்டும் குழியுமான விலங்கல்பட்டு சாலை
ADDED : ஆக 01, 2024 06:47 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு-வானமாதேவி உயர்மட்ட பாலம் வரை சாலை படுமோசமாக இருந்தது. இந்த சாலை நடுவீரப்பட்டு-விலங்கல்பட்டு வரை கடலுார் ஒன்றியத்திலும், விலங்கல்பட்டு-வானமாதேவி உயர்மட்டபாலம் வரை அண்ணாகிராமம் ஒன்றியத்திலும் உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கடலுார் ஒன்றியத்தில் உள்ள சாலை மட்டும் அகலப்படுத்தி சாலை போடப்பட்டது.ஆனால் அண்ணாகிராம ஒன்றியத்தில் உள்ள விலங்கல்பட்டு-வானமாதேவி பாலம் வரை உள்ள சாலை போடாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதன் வழியாக செம்மண் ஏற்றிய கனரக லாரிகள் சென்று வருவதால் சாலை தற்போது குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் விலங்கல்பட்டு கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலுக்கு வெளியூரிலிருந்து பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
இந்த சாலையில் உள்ள பள்ளத்தில் பக்தர்கள் விழுந்து செல்வது தினமும் நடந்து வருகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.