/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
/
விருதை ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
ADDED : ஆக 16, 2024 11:13 PM

விருத்தாசலம்: சுதந்திர தின விழாவையொட்டி, விருத்தாசலம் ஒன்றிய ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடந்தது.
மங்கலம்பேட்டை அடுத்த விசலுார் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். வி.ஏ.ஓ., சுந்தரி, வார்டு ஊராட்சி செயலாளர் பாபு வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் ஆனந்தகண்ணன் வாழ்த்தி பேசினார். உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், முதல்வரின் கிராம மேம்பாட்டு சாலை திட்டத்தில் தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
டி.மாவிடந்தலில் ஊராட்சித் தலைவர் கதீஜா பீவி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் காத்தோன் பீவி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பரமசிவம் வரவேற்றார். உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பள்ளிவாசல் அருகே 100 கே.வி., திறன் கொண்ட மின்மாற்றி அமைக்க வேண்டும். மாரியம்மன் கோவில் அருகே உள்ள திறந்தவெளி குடிநீர் கேணிக்கு மூடி அமைக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காட்டுப்பரூரில் ஊராட்சித் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் காசியம்மாள், ஊராட்சி செயலாளர் சங்கர், உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
கனவு இல்லத் திட்டத்தில் 16 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.