/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோ.மாவிடந்தல் பள்ளியில் கிராம வரைபட மதிப்பீடு
/
கோ.மாவிடந்தல் பள்ளியில் கிராம வரைபட மதிப்பீடு
ADDED : மே 01, 2024 09:03 AM

விருத்தாசலம், : கம்மாபுரம் அடுத்த கோ.மாவிடந்தல் கிராமத்தில் வேளாண் மாணவர்களின் கிராம வரைபட மதிப்பீடு நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனுார் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள், கம்மாபுரம் ஒன்றியத்தில் தங்கி, ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர். அவர்கள், கோ.மாவிடந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த கிராமப்புற மதிப்பீடு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
வேளாண் மாணவர்கள் ஆர்த்தியன், பூபாலன், திவ்யானந்த், கோகுல், ஜீவானந்தம், பிரனேஷ், சரண்நிதிஷ், சரவணன்,ஸ்ரீவர்சன், சுபசிரின், சுரேந்தர், வேணுஅரவிந்த் ஆகியோர் கிராம மக்களுடன் இணைந்து, கிராமம் குறித்த வரைபடம் வரைந்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில், கிராம இயற்கை வளம், மக்களின் குறைகள், காலக்கோடு, பருவ கால நாட்காட்டி, ஏரி, குளங்கள் இடம் பெற்றிருந்தன.