/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குரங்குகள் தொல்லை கிராம மக்கள் அச்சம்
/
குரங்குகள் தொல்லை கிராம மக்கள் அச்சம்
ADDED : ஆக 08, 2024 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம், : வடகரையில் கிராம மக்களை அச்சுறுத்தும் குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் அடுத்த வடகரையில் அதிகளவில் குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவைகள், தெருக்களில் நடந்து செல்லும் பெண்கள், பள்ளி மாணவர்கள், சிறுவர்களை கடிக்க, பாய்ந்து துரத்துகின்றன. இதனால் தெருக்களில் நடந்து செல்ல மக்கள் அச்சமடைகின்றனர்.
மேலும், விளைநிலங்களில் உள்ள கத்தரி, வாழை மற்றும் நெற்பயிர்களை சேதபடுத்துகின்றன. எனவே, வடகரையில் சுற்றித்திரியும் குரங்குகளைப் பிடித்து காப்புக் காட்டில் விட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.