/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குரங்குகள் அட்டகாசம் கிராம மக்கள் அச்சம்
/
குரங்குகள் அட்டகாசம் கிராம மக்கள் அச்சம்
ADDED : டிச 09, 2024 06:40 AM

திட்டக்குடி : திட்டக்குடி அருகே குடியிருப்புகளில் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்வதால் கிராம மக்கள் அச்சம் அடைகின்றனர்.
திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு பல மாதங்களாக கூட்டம் கூட்டமாக குரங்குகள் சுற்றித் திரிகின்றன. அதிகாலையிலேயே வீடுகளுக்குள் புகுந்து, கையில் சிக்குவதை அள்ளி சேதபடுத்துகின்றன.
அப்பகுதியில் உள்ள தென்னை, கொய்யா, பப்பாளி, வாழை உள்ளிட்ட மரங்களில் ஏறி, காய், கனிகளை நாசம் செய்வதுடன் தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்களை அச்சுறுத்துகின்றன. இதனால், கிராம மக்கள் அச்சமடைகின்றனர்.
எனவே, பெருமுளை கிராமத்தில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து, காப்புக்காடுகளில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.