/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விஷ்வ ஹிந்து பரிஷத் விநாயகர் சதுர்த்தி விழா
/
விஷ்வ ஹிந்து பரிஷத் விநாயகர் சதுர்த்தி விழா
ADDED : செப் 08, 2024 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் வளாகத்தில், விநாயகர் சதுர்த்தியையொட்டி,விஸ்வரூப வீர விநாயகருக்கு நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பக்தர்களுக்கு அன்னதானம், பள்ளி மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில், நோட்டு பேனா மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் ஜெயமுரளி கோபிநாத், மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன், மாநில பொறுப்பாளர் கார்த்திகேயன்,பா.ஜ.,மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் பாலு விக்னேஸ்வரன்,மாநில பொறுப்பாளர் ரகுபதி மற்றும் விழா பொறுப்பாளர்கள் நாராயணன், விஜய், பரணிதரன், முத்துக்குமரன், தண்டபாணி பங்கேற்றனர்.