/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் துப்பாக்கிச்சூடு சம்பவம்: பேரூராட்சி கவுன்சிலர் கைது
/
விருத்தாசலம் துப்பாக்கிச்சூடு சம்பவம்: பேரூராட்சி கவுன்சிலர் கைது
விருத்தாசலம் துப்பாக்கிச்சூடு சம்பவம்: பேரூராட்சி கவுன்சிலர் கைது
விருத்தாசலம் துப்பாக்கிச்சூடு சம்பவம்: பேரூராட்சி கவுன்சிலர் கைது
ADDED : ஜூன் 27, 2024 11:56 PM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய, திருவிடைமருதுார் பேரூராட்சி சுயேட்சை கவுன்சிலரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரை சேர்ந்தவர் முன்னாள் காங்., எம்.எல்.ஏ., தியாகராஜன் மகன் இளையராஜா,45; முன்னாள் தி.மு.க., பிரமுகர். தற்போது த.வா.க.,வில் இணைந்துள்ளார். வள்ளலார் குடில் என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருகிறார்.
மேலும், மணவாளநல்லுாரில் இயற்கை விவசாயம் செய்கிறார்.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்தாண்டு, செப்டம்பர் 8ம் தேதி, அவரது வயலில் நின்றிருந்த இளையராஜாவை, மூன்று பைக்குகளில் வந்த 6 பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்ட தப்பிச் சென்றனர்.
அதில் உடலில் பல இடங்களில் படுகாயமடைந்த இளையராஜா அங்கிருந்து தப்பித்து, அவரது காரிலேயே விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சைக்கு சேர்ந்தார். பின்னர், சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில், அதே பகுதியை சேர்ந்த ராஜசேகரன் மகன்கள் ஆடலரசு, ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த புகழேந்தி உட்பட 10 பேரை விருத்தாசலம் போலீசார் கைது செய்தனர்.
மேலும், கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்த தஞ்சாவூர் மாவட்டம், திருவிடை மருதுார், வடக்கு எடத்தெருவை சேர்ந்த பேரூராட்சி சுயேச்சை கவுன்சிலர் செந்தமிழ்செல்வன்,30; என்பவரை தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.
அதில் கிடைத்த தகவலின் பேரில், திருவிடைமருத்துாரில் உள்ள அவரது வீட்டில் இருந்த செந்தமிழ்ச்செல்வனை நேற்று முன்தினம் இரவு டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.