/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் கரும்பு விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
/
விருத்தாசலம் கரும்பு விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
விருத்தாசலம் கரும்பு விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
விருத்தாசலம் கரும்பு விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
ADDED : ஜூலை 09, 2024 05:57 AM

கடலுார் : சிறப்பு பட்டத்தில் சாகுபடி செய்த கரும்பு பயிரை ஆலைகளுக்கு வெட்டி அனுப்ப நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் மனு அளித்தனர்.
விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம கரும்பு விவசாயிகள் கொடுத்துள்ள மனு;
எடக்குப்பம், அகரம், கொம்படிக்குப்பம், ஆதனுார், மாத்துார், பூவனுார், பள்ளிப்பட்டு, விஜயமாநகரம், கோபுரபுரம், குருவக்குப்பம், புதுக்கூரைப்பேட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், கடந்த நான்கு ஆண்டுகளாக கரும்பு சாகுபடி செய்து சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கி வருகிறோம். தற்போது சிறப்பு பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு அறுவடைக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில், தற்போதுள்ள கரும்புகளை எந்த ஆலைகளுக்கும் வெட்டக்கூடாது, கரும்பு சப்ளை செய்யக்கூடாது என சர்க்கரை துறை ஆணையரிடம் இருந்து உத்தரவு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது கரும்பு விவசாயிகளிடையே மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. கரும்புகள் நோய் பாதிக்கப்பட்டு கருகும் நிலையில் உள்ளது. காலம் தாழ்த்தினால் மகசூல் இழப்பு ஏற்படும். பெண்ணாடம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு பணம் வரவில்லை. எனவே, எங்களுக்கு ஒதுக்கீடு செய்த ஆலைகளுக்கு கரும்பு வெட்டி அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.