/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடைபயிற்சி விழிப்புணர்வு விருதை போலீசார் பயிற்சி
/
நடைபயிற்சி விழிப்புணர்வு விருதை போலீசார் பயிற்சி
ADDED : மே 10, 2024 01:21 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் போலீசார் சார்பில் நடைபயிற்சி மற்றும் கண்காணிப்பு கேமரா குறித்து விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர், நகராட்சி சிறுவர் பூங்காவில் நடந்த பயிற்சிக்கு டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் தலைமை தாங்கினார்.
இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் வரவேற்றார்.
இதய நிறைவு தான பயிற்றுனர் தமிழரசன் யோகா பயிற்றுவித்து, அதன் நன்மைகள் குறித்து விளக்கமளித்தார்.
போலீசார், பொது மக்கள் தியான பயிற்சி செய்தனர்.
தொடர்ந்து, வடக்கு பெரியார் நகரில் முக்கிய வீதிகளில் போலீசார் ஊர்வலமாக சென்று குற்ற சம்வங்களை தடுக்கும் வகையில் வீடுகள், வீதிகளின் முகப்புகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.