ADDED : ஜூன் 13, 2026 07:54 PM
பெண்ணாடம், ஜூன் 14–
பெண்ணாடத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
பெண்ணாடம் தேர்வு நிலை பேரூராட்சியில் உள்ள, 15 வார்டுகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு அதிகளவு சாதாரண மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பேரூராட்சி எல்லை பகுதிகளும் நாளுக்குநாள் விரிவுபடுத்தப்பட்டு, மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.
இதனால் பேரூராட்சி வார்டுகளில் உள்ள வடிகால் கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. மழை காலங்களில் பல இடங்களில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் முறையாக வெளியேற்ற போதிய வசதிகள் இல்லை.
பல வார்டுகளில் கழிவுநீர் வடிகா ல் ஆக்கிரமிக்கப்பட்டு துார்ந்துள்ளதால் மழை காலங்களில் சாலைகள் மற்றும் வீடுகளுக்குள் கழிவுநீர் புகும் அவல நிலை தொடர்கிறது.
அதனால், பெண்ணாடம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும் என வார்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
