/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மணிமுக்தா ஆற்றில் குவியும் கழிவுகள்
/
மணிமுக்தா ஆற்றில் குவியும் கழிவுகள்
ADDED : மார் 05, 2025 05:15 AM

விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டுகளில் உள்ள பெருவணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ராட்சத வடிகால் வழியாக மணிமுக்தாற்றில் விடப்படுகிறது. அதுபோல், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை ஆற்றின் கரைகளில் கொட்டப்படுகின்றன.
இதனால் சுற்றுச்சூழல் மாசதடைவதுடன், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது. மேலும், புறவழிச்சாலையோரம் கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் முகத்தை மூடியபடி செல்லும் அவலம் தொடர்கிறது.
விருத்தாசலம் - எருமனுார் சாலையில் உள்ள மணிமுக்தாறு மேம்பாலத்தின் இருபுற கரைகளிலும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. நாய், பன்றிகள் உலவுதால் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடந்து செல்ல முடியாமல் சிரமமடைகின்றனர்.
சமீபத்தில் மணவாளநல்லுார் மணிமுக்தாற்றில் 25 கோடி ரூபாயில் தடுப்பணை கட்டும் பணி துவங் கியது. ஆனால், தடுப் பணைக்கு 200 மீட்டர் தொலைவில் குப்பைகள் குவிந்து கிடப்பதால், அரசின் திட்டப் பணிகள் வீணா கும் அபாயம் உள்ளது.
எனவே, எருமனுார் மணிமுக்தாறு பாலத்தின் கீழ் பகுதியில் குவிந்து கிடக்கும் கழிவுகளை அப்புறப்படுத்தி, சுகாதாரமாக பயன்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.