ADDED : ஜூலை 19, 2026 10:13 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை மெயின்ரோட்டில் பழைய சினிமா தியேட்டர் எதிரில் சாலையோரம் உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொரப்பாடி பேரூராட்சியில் புகார் செய்தும், அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர்.
குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு மண் மற்றும் கழிவுநீர், அதில் கலந்து வருகிறது. இதற்கு தொரப்பாடி பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
