ADDED : செப் 10, 2024 12:37 AM
பண்ருட்டி : பண்ருட்டியில் விநாயகர் சிலைக்கு அனைத்து மதத்தினர் சார்பில் மதநல்லிணக்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டாரகிராமங்களில் இருந்து விநாயகர் சிலைகள், நேற்று கடலுார் கடலில் விஜர்சனம் செய்ய ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. விநாயகர் சிலைகளுக்கு பண்ருட்டி பஸ் நிலையம் எதிரில் அனைத்து மதத்தினர் சார்பில் மதநல்லிணக்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் போலீஸ் லைன் பள்ளிவாசல் முத்தவள்ளி யாசின் தலைமை தாங்கினார்.பண்ருட்டி ஏ.எல்.சி.சர்ச் டீனர்ட் வின்சென்ட், பா.ஜ., பொதுச் செயலாளர் வினோத்குமார், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், செயலாளர் வீரப்பன், மொய்தீன் கான், ஆதாம் கான்,பசுலுதீன்,தவுலத் பாஷா, பாபு, நூர் முகமது உள்ளிட்டோர் இனிப்பு வழங்கி வரவேற்பு அளித்தனர்.