/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் முதல்வருக்கு வரவேற்பு
/
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் முதல்வருக்கு வரவேற்பு
ADDED : பிப் 23, 2025 05:51 AM

கடலுார், : தி.மு.க., குறிஞ்சிப்பாடி ஒன்றிய, நகர பேரூர் சார்பில் வடலுாரில் முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடலுாரில் நேற்று முன்தினம் நடந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் நெய்வேலி சென்றார். அவருடன் அமைச்சர் பன்னீர்செல்வம் வருகை தந்தார்.
வழியில் முதல்வர் ஸ்டாலினுக்கு குள்ளஞ்சாவடி, தம்பிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, ரயில்வே கேட், வடலுார் ஆகிய பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். வடலுார் நகர்மன்ற தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், பேரூராட்சி தலைவர் கோகிலாகுமார், துணைத் தலைவர் ராமர், பேரூராட்சி செயலாளர் ஜெய்சங்கர், வடலுார் நகர தலைவர் சுப்ராயலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வடலுார் எல்லையில் இருந்து முதல்வர் செல்லும் சாலையில் ரோடு ேஷா நடந்தது. முதல்வர் சாலையில் நின்றிருந்தவர்களிடம் கையசைத்தும், செல்பி எடுத்தும், குழந்தை களிடம் பேசியும் அசத்தினார், பொதுமக்களிடம் மனுக்களையும் பெற்றார்.