/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் அரசு பெரியார் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

ADDED : ஜூலை 04, 2024 11:41 PM

கடலுார் : கடலுார் அரசு பெரியார் கலைக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
கடலுார் பெரியார் அரசு கலைக் கல்லுாரியில் 20 இளநிலை பாடப் பிரிவு மொத்தம் 1,329 இடங்கள் உள்ளன. கல்லுாரியில் இரண்டு கட்டமாக நடந்த கலந்தாய்வில் இதுவரை 905 மாணவர்கள் சேர்க்கை நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவங்கியது.
கல்லுாரிக்கு வருகை தந்த முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளை, கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் பேராசிரியர்கள் வரவேற்றனர். பின்னர் முதலாமாண்டு மாணவர்களை வாழ்த்தி வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனர்.
நிகழ்ச்சியில் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
முதலாமாண்டு மாணவர்களுக்கு 3ம் தேதி முதல் வரும் 10ம் தேதி வரை வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பு நடக்கிறது. 11ம் தேதி முதல் பாடப்பிரிவு வகுப்புகள் துவங்குகிறது.