தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட முகாம்

துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட முகாம்

துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட முகாம்


ADDED : ஜூலை 23, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 04:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில்,  நகராட்சி சார்பில் துய்மை பணியாளர்களுக்கு சிறப்பு அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு, நகராட்சி கமிஷ்னர் நாகராஜ் தலைமை தாங்கினார்.

துப்புரவு அலுவலர் சிவராமகிருஷ்ணன், நகரமைப்பு அலுவலர் செல்வம், நகரமைப்பு ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், நடமாடும் மருத்துவர் சுகன்யா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.

இந்த முகாமில், ரேஷன்கார்டு, ஆதார்கார்டு சம்பந்தமான சேவைகள் பணியாளர்கள்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, துாய்மை பணியாளர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை, தமிழ்நாடு துாய்மை பணியாளர் வாரியம், தாட்கோ, சுகாதாரம், குடும்ப நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை, வீட்டு வசதிதுறை, தொழிலாளர் நலத்துறை, தமிழ்நாடு மின்னாளுமை முகமை மற்றும் வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் அரங்குகள் அமைக்கப்பட்டன.

இதில், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள், நகராட்சி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us