/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேற்கு ராமாபுரம் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
/
மேற்கு ராமாபுரம் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
ADDED : ஆக 25, 2024 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அடுத்த மேற்கு ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் எல்லப்பன் தலைமை தாங்கி, கூட்டத்தின் அவசியம், குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகள் குறித்து கூறினார்.
கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் உட்பட 24 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்ட ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், உதவி தலைமையாசிரியர் மேற்பார்வையில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் செய்திருந்தனர்.

