/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொடிக்கம்பம் நடும்போது தே.மு.தி.க., பிரமுகர் பலி
/
கொடிக்கம்பம் நடும்போது தே.மு.தி.க., பிரமுகர் பலி
ADDED : ஆக 26, 2024 08:37 AM
பண்ருட்டி: கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் ஊராட்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், 40, தே.மு.தி.க., கிளை துணை செயலர். இவர் நேற்று காலை 9:00 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, கட்சி கொடி ஏற்றுவதற்காக கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டார்.
கொடிக்கம்பம் நடுவதற்காக கம்பத்தை மேலே துாக்கிய போது, கொடிக்கம்பம் மின் கம்பியில் பட்டு அனைவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். கட்சியினர் ஐந்து பேரும் படுகாயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து, தே.மு.தி.க., மாவட்ட செயலர் சிவக்கொழுந்து ஆறுதல் கூறினார். முத்தாண்டிக்குப்பம் விசாரிக்கின்றனர்.