/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடுவீரப்பட்டு சுகாதாரநிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவது எப்போது?
/
நடுவீரப்பட்டு சுகாதாரநிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவது எப்போது?
நடுவீரப்பட்டு சுகாதாரநிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவது எப்போது?
நடுவீரப்பட்டு சுகாதாரநிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவது எப்போது?
ADDED : ஆக 18, 2024 11:52 PM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பிரசவம் பார்க்கும் கட்டடத்தில் இயங்குவதால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.
நடுவீரப்பட்டில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நடுவீரப்பட்டு,சி.என்.பாளையம்,குமளங்குளம்,சிலம்பிநாதன்பேட்டை,விலங்கல்பட்டு,கொடுக்கன்பாளையம்,பாலுார் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்தவர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்த சுகாதாரநிலையத்தில் 24 மணிநேரமும் பிரசவம் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு,பிரசவம் பார்க்கப்பட்டு வருகிறது.
இதனால் சுற்று பகுதியை சேர்ந்தவர்கள் பலர் பலனடைந்து வருகின்றனர். இந்த சுகாதாரநிலைய கட்டடம் பழுதடைந்ததால் முழுமையாக மூடப்பட்டது.இதனால் சுகாதார நிலையம் முழுமையாக பிரசவ வார்டில் கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதனால் சிகிச்சைக்கு வரும் புறநோயளிகள் மற்றும் பிரசவத்திற்கு வரும் பெண்கள் என அனைவரும் இட நெருக்கடியில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.
இந்த சுகாதாரநிலையத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன் சித்தமருத்துவ பிரிவிற்கென தனியாக ஒரு கட்டடம் கட்டப்பட்டது.ஆனால் இந்த கட்டடம் திறக்காததால் அவர்களும் இந்த இட நெருக்கடியில் உள்ளனர்.
இதுபோல் பல்மருத்துவம், லேப்,எக்ஸ்ரே,கண் மருத்துவபிரிவு என அனைத்து பிரிவினரும் ஒரே இடத்தில் இருப்பதால் நோய் தொற்று ஏற்பட்டு நோயாளிகளும்,அவருடன் சிகிச்சைக்கு வருபவர்களும் அவதியடைந்து வருகின்றனர்.ஆகையால் தொகுதி எம்.எல்.ஏ.,வான வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் உடன் நடவடிக்கை எடுத்து சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும், மேலும் சித்த மருத்துவப் பிரிவை உடன் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.