ADDED : ஜூன் 04, 2026 04:50 PM

நெல்லிக்குப்பம்: எரிவாயு தகன மேடையை திறக்க கோரிக்கை எழுந்துள்ளது.
நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சுடுகாடுகள் உள்ளன. இங்கு இறந்தவர்களின் உடலை எரிப்பதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளதோடு செலவும் அதிகமாகிறது.இதை சரி செய்ய சோழவல்லி பகுதியில் முதல் முறையாக 2 கோடி ரூபாய் செலவில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி நடந்தது.
அதற்கு தேவையான இயந்திரங்களும் பொருத்தப்பட்டன. தண்ணீர்,குளியலறை வசதி போன்ற பல்வேறு பணிகள் முடிந்து, எரிவாயு சிலிண்டர்கள் வாங்கப்பட்டன. அங்கு மும்முனை மின்சார இணைப்பு பெறப்பட்டது.
இதை பராமரிக்க எந்த தொண்டு நிறுவனமும் முன் வரவில்லை. அதனால் பணி முடிந்தும் திறக்காமல் உள்ளனர்.
மக்கள் நலன் கருதி தொண்டு நிறுவனங்கள் வரும் வரை எரிவாயு தகனமேடையை நகராட்சியே நடத்த வேண்டுமென மக்கள் கோரியுள்ளனர்.
