தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தென்னையில் வெள்ளை ஈக்களால் பாதிப்பு

தென்னையில் வெள்ளை ஈக்களால் பாதிப்பு

தென்னையில் வெள்ளை ஈக்களால் பாதிப்பு


ADDED : ஏப் 28, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குள்ளஞ்சாவடி: தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பாடி மற்றும், குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதி கிராமங்களில் தென்னை விவசாயம் மூலம் விவசாயிகள் போதிய வருமானம் ஈட்டி வருகின்றனர்.

இளநீர், தேங்காய், கீற்றுகளுக்கு பயன்படும் மட்டைகள், நார்கள் என, தென்னை மகசூல் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

குள்ளஞ்சாவடி பகுதி தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களால் மரங்களில் உள்ள மட்டைகளில் அரிப்பு ஏற்பட்டு, பாதிப்பு அடைந்துள்ளது.

ரூகோஸ் ஒயிட் பிளை எனும் இந்த வெள்ளை ஈக்களால் தென்னை மரங்களில் பாதிப்பு ஏற்பட்டு, மகசூல் குறைய வாய்ப்புள்ளதாக தென்னை விவசாயிகள் கூறுகின்றனர்.

வேளாண் அதிகாரிகள் வெள்ளை ஈக்களால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த, விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us