ADDED : ஆக 09, 2024 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: விழுப்புரம், புருஷானுாரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 36; கூலித் தொழிலாளி. இவரது மனைவி நித்யா. இருவரும், கடலுார், மஞ்சக்குப்பத்தில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்ற மணிகண்டன் வீடு திரும்பவில்லை.
நித்யா அளித்த புகாரில், கடலுார், புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.