ADDED : மார் 11, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரியில் இருந்து காஞ்சிபுரம் சிகிச்சைக்குச் சென்ற மனைவியைக் காணவில்லை என அவரது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புவனகிரி, பெருமாத்துார், செல்ல பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய், 48; மனைவி ராஜேஸ்வரி, 45; இவர்களுக்கு குழந்தை இல்லாததால், காஞ்சிபுரத்தில் உள்ள தாயார் வீட்டிற்கு சிகிச்சைக்கு செல்வதாக ராஜேஸ்வரி கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 8ம் தேதி காலை 11:00 மணிக்கு புவனகிரி பாலக்கரையில் கிளாம்பாக்கம் செல்லும் அரசு பஸ்சில் விஜய் அனுப்பி வைத்துள்ளார். மாலையில் தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர் காஞ்சிபுரம் செல்லாதது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த விஜய் பல இடங்களில் தேடியும் ராஜேஸ்வரி கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.