ADDED : மே 10, 2026 11:41 PM
புதுச்சத்திரம்: பழுதடைந்துள்ள இணைப்பு பாலத்தை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலுார்–பரங்கிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில், கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இந்த இணைப்பு சாலையில், புதுச்சத்திரம் அடுத்த மடவாப்பள்ளம் பகுதியில், இணைப்பு பாலம் உள்ளது.
இந்நிலையில், தற்போது இந்த இணைப்பு பாலத்தில், விரிசல்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில், எப்போது இடிந்து விழுமோ, என்ற நிலையில் உள்ளது. இந்த இணைப்பு பாலம் இடிந்து விழுந்தால், இப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை ஏற்படும்.
இப்பகுதி மக்களின் நலனை கருத்தில்கொண்டு, மடவாப் பள்ளத்தில் பழுதடைந்துள்ள, இணைப்பு பாலத்தை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
