/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கெங்கைகொண்டானில் நுாலகம் அமைக்கப்படுமா?
/
கெங்கைகொண்டானில் நுாலகம் அமைக்கப்படுமா?
ADDED : ஏப் 29, 2024 04:12 AM
மந்தாரக்குப்பம், : கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியில் கிளை நுாலகம் அமைக்க, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதிகளில் கிளை நுாலகங்கள் இல்லாததால் வாசகர்கள், மாணவர்கள் உலக விஷயங்களை தெரியாமல் கவலை அடைகின்றனர்.
கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதிகளில் கிளை நுாலகம் இல்லாமால் அருகில் உள்ள என்.எல்.சி., குடியிருப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் அருகே பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கிளை நுாலகம் அமைந்து உள்ளதால் மாணவர்கள், முதியவர்கள் ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதிகளில் சகல வசதிகளுடன் நுாலகங்களை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள் ளனர்.

