/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய பஸ் நிலையம் பகுதியில் வேகத்தடை அமைக்கப்படுமா
/
புதிய பஸ் நிலையம் பகுதியில் வேகத்தடை அமைக்கப்படுமா
புதிய பஸ் நிலையம் பகுதியில் வேகத்தடை அமைக்கப்படுமா
புதிய பஸ் நிலையம் பகுதியில் வேகத்தடை அமைக்கப்படுமா
ADDED : மே 27, 2024 05:50 AM
பெண்ணாடம்: விபத்துகளை தடுக்க பெண்ணாடம் புதிய பஸ் நிலையம் பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில், பெண்ணாடம் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பெண்ணாடம், புதிய பஸ் நிலையம் அருகே வேளாண் விரிவாக்க மையம், கால்நடை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.
இங்கு வரும் பொது மக்கள் விருத்தாசலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையை கடந்துதான் அரசு அலுவலங்கள், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டும். மேலும், புதிய பஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் வாரச்சந்தைக்கு ஏராளமானோர்கள் வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில் வேகத்தடை இல்லாததால் பஸ், லாரி, சிமென்ட் லோடு ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் சாலையை கடக்க முயலும் பொது மக்கள், நோயாளிகள் வாகனங்களில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, பெண்ணாடம் புதிய பஸ் நிலையம் அருகே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

