
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே லாரி மோதி தலை நசுங்கி பெண் இறந்தார்.
சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர், முருகன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் அப்பாத்துரை மனைவி புரட்சிமணி, 55. விவசாய தொழிலாளி. இவர், நேற்று காலை 6:00 மணியளவில் மிராளூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் நடந்து சென்றார்.
அப்போது அவ்வழியாக மண் லோடு ஏற்றி வந்த லாரி (டி.என்.31 சிடி7999) அவர் மீது மோதிவிட்டு எதிரே சிமென்ட் கலவை ஏற்றி வந்த டேங்கர் லாரி மீது மோதி நின்றது. இதில், புரட்சிமணி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். லாரி டிரைவர் தப்பியோடினார்.
விபத்து குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப் பதிந்து, லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.