ADDED : ஜூலை 17, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: ரயில் இன்ஜினில் அடிபட்ட பெண் பலியானார்.
குள்ளஞ்சாவடி அடுத்த வழுதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் மனைவி அம்சவள்ளி. இவர் நேற்று மாலை, குள்ளஞ்சாவடி அருகே ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது, கடலூர் துறைமுகத்தில் இருந்து குறிஞ்சிப்பாடி நோக்கி வந்த ரயில் இன்ஜின் மீது மோதியது.
அதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடலுார் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.