ADDED : ஆக 05, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்,: விருத்தாசலம் அருகே மூன்று பிள்ளைகளுடன் மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ், 31. இவரது மனைவி ரமணி, 30. இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஆனந்தராஜ் விருத்தாசலத்தில் சொந்தமாக ஸ்டுடியோ வைத்துள்ளார். கடந்த 19ம் தேதி ரமணி தனது பிள்ளைகளுடன் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து ஆனந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, ரமணி மற்றும் அவரது பிள்கைள் உள்ளிட்ட நால்வரையும் தேடி வருகின்றனர்.