ADDED : ஜூன் 05, 2024 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பிஞ்சனுார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் மனைவி துர்கா, 42, என்பவர் தனது பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, துர்காவை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.