ADDED : ஜூலை 25, 2024 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர், நேதாஜி தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்லக்கிளி, 37. இரண்டு மகள்கள் உள்ளனர்.
நேற்று மாலை 3:00 மணியளவில், இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால், அவரது தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் குத்திவிட்டு தப்பியோடினார்.
அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, செல்லக்கிளியை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு சிதம்பரம் மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.