/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வரை வரவேற்க வந்து விபத்தில் சிக்கிய பெண் மூளைச்சாவு
/
முதல்வரை வரவேற்க வந்து விபத்தில் சிக்கிய பெண் மூளைச்சாவு
முதல்வரை வரவேற்க வந்து விபத்தில் சிக்கிய பெண் மூளைச்சாவு
முதல்வரை வரவேற்க வந்து விபத்தில் சிக்கிய பெண் மூளைச்சாவு
ADDED : பிப் 25, 2025 07:00 AM
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் முதல்வரை வரவேற்க வந்தபோது விபத்தில் சிக்கிய பெண் மூளைசாவு அடைந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த திருப்பயர் கிராமத்தில், பள்ளி கல்வித்துறை சார்பில் 'பெற்றோர்களை கொண்டாடுவோம்' நிகழ்ச்சி கடந்த 22ம் தேதி நடந்தது. இதற்காக அன்று காலை, நெய்வேலியில் இருந்து விருத்தாசலம் வழியாக முதல்வர் ஸ்டாலின் சென்றார்.
முதல்வரை வரவேற்க மங்கலம்பேட்டை அடுத்த பழையபட்டிணம் கிராமத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர், டாடா ஏஸ் வேனில் விருத்தாசலம் வந்தனர்.
பின் நிகழ்ச்சி முடிந்து பகல் 12:00 மணிக்கு மேல், விருத்தாசலத்தில் இருந்து கச்சிராயநத்தம் - இருசாளகுப்பம் சாலையில் சென்றனர். அப்போது, நிலைதடுமாறிய டாடா ஏஸ் வேன், சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. இதில், டிரைவர் உட்பட 35 பேர் படுகாயமடைந்தனர்.
அதில், குப்புசாமி, 55, உயிரிழந்தார். மலைராஜன் மனைவி வேம்பரசி, 32, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவர் மூளைச்சாவு அடைந்துள்ளார்.
சிகிச்சையில் இருந்த பெண் மூளைச்சாவு அடைந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

