/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆற்றில் பெண் சடலம்; போலீசார் விசாரணை
/
ஆற்றில் பெண் சடலம்; போலீசார் விசாரணை
ADDED : பிப் 27, 2025 06:53 AM
கடலுார்; கடலுார் அருகே தென்பெண்ணையாற்றில் இறந்துகிடந்த பெண்ணின் இறப்பிற்கான காரணம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
பண்ருட்டி அடுத்த பெரிய காட்டுசாகை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்குமார்
மனைவி கலைச்செல்வி,36. திருமணமாகி ஐந்து வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில்,
கடந்த ஆறுமாதத்திற்கு முன் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது முதல், கடலுார்
வெளிச்செம்மண்டலம் பகுதியில் உள்ள தாய் வீட்டில் இருந்து வந்தார். பிறந்த குழந்தைக்கு அடிக்கடி
உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கலைச்செல்வி கடும் மனஉளைச்சலில் இருந்தார். நேற்று அதிகாலை
3மணியளவில் தாய் வீட்டிலிருந்த கலைச்செல்வியைக் காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தனர்.
அப்போது வெளிச்செம்மண்டலம் அருகே தென்பெண்ணையாற்றில் கலைச்செல்வியின் இறந்த உடல்
மீட்கப்பட்டது. புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார், சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து கலைச்செல்வி இறப்பிற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

