/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.50,000 அசலுடன் 2 கிராம் தங்கம் பெண்களிடம் நுாதன மோசடி
/
ரூ.50,000 அசலுடன் 2 கிராம் தங்கம் பெண்களிடம் நுாதன மோசடி
ரூ.50,000 அசலுடன் 2 கிராம் தங்கம் பெண்களிடம் நுாதன மோசடி
ரூ.50,000 அசலுடன் 2 கிராம் தங்கம் பெண்களிடம் நுாதன மோசடி
ADDED : மார் 07, 2025 02:45 AM
விருத்தாசலம்:ரூபாய் 50,000 கட்டினால், 35 நாட்களில் அசலுடன் 2 கிராம் தங்கம் தருவதாக, நுாதன மோசடி அரங்கேறியுள்ளது.
கடலுார் மாவட்டத்தில், விருத்தாசலம், மங்கலம்பேட்டை, கம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மகளிர் குழுவினரிடம், மர்ம கும்பல் ஒன்று, 50,000 ரூபாய் கட்டினால், 35 நாட்களுக்கு பின், அசலுடன், 2 கிராம் தங்கம் கிடைக்கும் என, ஆசை வார்த்தை கூறினர்.
இத்திட்டத்தில் பணம் செலுத்திய ஓரிரு பெண்களுக்கு, செலுத்திய பணத்துடன், 2 கிராம் தங்கத்தை வீடு தேடி சென்று மோசடி கும்பல் வழங்கியது. இதை கேள்விப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், அந்த மோசடி கும்பலின் வலையில் விழுந்துள்ளனர். குறிப்பிட்ட காலத்திற்கு பின், அசலும், 2 கிராம் தங்கமும் கிடைக்க பெறாததால், தங்களை சிபாரிசு செய்த பெண்களை தொடர்பு கொண்ட போது, மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்தது தெரிய வந்தது.
மங்கலம்பேட்டை பா.ஜ., வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் கூறுகையில், 'பெங்களூருவை சேர்ந்த கும்பல், போலியான ஒரு நிறுவன பெயரை பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது. பெண்களிடம் ஆசை காட்டிய பெண் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் எஸ்.பி.,யிடம் புகார் கொடுக்க உள்ளனர்' என்றார்.